The Indian Times

NETRIKANN TITLE TRACK | Nayanthara | Vignesh Shivan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டதோடு அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று அணைத்து முன்னணி தமிழ் நடிகர்களுடனும் ஜோடி போட்ட நடிகை நயன்தாரா. தற்போது இவர் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது

இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்தது. விக்னேஷ் சிவன் தமிழில் நானும் ரௌடித்தான், தானா சேர்ந்த கூட்டம் என்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் தற்போது விஜய் சேதுபதி , சமந்தா, நயன்தாரா ஆகியோரை வைத்து காதுவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்து கொண்ட

Advertisement

புகைப்படங்களையும் அவ்வப்போது விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா கண் பார்வையற்றவர் போல் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in