The Indian Times

தல அஜித்திடம் தோற்றுப்போன பொன்னியின் செல்வன்… இத்தனை நடிகர்கள் இருந்தும் அஜித் சாதனையை முறியடிக்க முடியாமல் போன பொன்னியின் செல்வன்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertisement

இப்படத்தினை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தையும் போனி கபூர் தயாரித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று மாபெரும் வசூலை பெற்று வருகிறது.இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் அஜித்திடம் தோற்றுப்போனதாக இணையத்தில் செய்திகள் உலா வந்துகொண்டு இருக்கிறது. அஜித் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிய படம் விஸ்வாசம்.

Advertisement

இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்திழுத்தார் அஜித்.இப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.அவ்வாறு ஒளிபரப்பியதில் டி ஆர் பி ரேட்டிங்கில் 23.8 புள்ளிகளை பெற்று இன்று வரை முதலிடத்தில் உள்ளது,இந்நிலையில் அண்மையில் வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன் பொங்கலை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.இப்படம் டி ஆர் பி ரேட்டிங்கில் 16.38 புள்ளிகளை மட்டுமே பெற்று அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தின் சாதனையை முந்த தவறியுள்ளதாக இணையத்தில் தீ போல செய்திகள் பரவி வருகிறது.இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் பொன்னியின் செல்வன் படக்குழு அதிகாரபூர்வ ரேட்டிங் விபரங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in