விபத்தில் சேதமடைந்த விஜய் ஆண்டனி முகம்… பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஏற்பாடு… சோகத்தில் ரசிகர்கள்

சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்து தனது சினிமா பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினி

விபத்தில் சேதமடைந்த விஜய் ஆண்டனி முகம்... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஏற்பாடு... சோகத்தில் ரசிகர்கள் 1

விளம்பரம்

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.மேலும் இவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தினை இயக்கி நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன்

விபத்தில் சேதமடைந்த விஜய் ஆண்டனி முகம்... பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஏற்பாடு... சோகத்தில் ரசிகர்கள் 2

விளம்பரம்

இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா லங்காவி தீவில் படமாக்கப்பட்டு வருகிறது.படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி சென்ற படகு விபத்துக்குள்ளாக்கியது. இதனால் அவரை அங்கிருந்து மீட்டு கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விபத்தில் விஜய் ஆண்டனி முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.மேலும் பற்களும் உடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது முகத்தினை மீண்டும் சரி செய்ய விஜய் ஆண்டனி பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விரைவில் அவர் குணமடைந்து நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment