The Indian Times

நானே வருவேன் தனுஷ் போல நடனமாடிய VIJAYTV புகழ்…. என்னம்மா நடிக்கிறாரு அசத்திட்டாரே மனுஷன்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் புகழ்.வாய்ப்பு தேடி சினிமாவில் இவர் அலையாத இடம் இல்லை,இறுதியாக விஜய் தொலைக்காட்சி இவரை அரவணைத்தது.கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணி தன்னால் முடிந்த வரை மக்களை மகிழ்வித்தார்.முதலில் கூட்டத்தில் ஒருவனாய் வந்துகொண்டிருந்த புகழ் பின்னர் படிப்படியாக முன்னேறி தனியாக தெரிய தொடங்கினார்.தனது கடின உழைப்பினை தொடர்ந்து போட்டு வந்த புகழுக்கு தற்போது சினிமாவில் நல்ல இடம் கிடைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சி இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது,இதன்மூலம் மக்களிடம் பேராதரவினை பெற்று இன்று சினிமாவில் கலக்கி வருகிறார்.மேலும் கதாநாயகனாக ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படி படிப்படியாக வளர்ந்து வருகிறார் புகழ்

Advertisement

தற்போது நிகழ்ச்சிக்காக லண்டன் சென்ற அவர் அங்கு நானே வருவேன் தனுஷ் போல நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் புகழின் நடனத்தினையும் அவரது நடிப்பினையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் புகழ் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in