“நான் Hurt ஆகுறது உங்களுக்கு தெரியலையா?” Srushti dange வை வெளுத்து வாங்கிய VJ Parvathy ! Survivor promo
தற்போது புதிதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அறிமுகமாகி இருக்கும் நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம் ஆனால் வெளி நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. தமிழில் முதல் முறையாக தற்போது தான் அறிமுகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியை அக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இதில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

முதல் நாளே காடர்கள் வேடர்கள் என அணைத்து போட்டியாளர்களும் பிறக்க பட்டு அவர்களுக்கு கடுமையான போட்டிகள் வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ப்ரோமோவில் தொகுப்பாளினி பார்வதிக்கும் , நடிகை சிருஷ்டி டங்கேவிற்கும் வாக்குவாதம் ஏற்படுவது போல் தெரிகிறது. தற்போது இந்த ப்ரோமோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in