“பசங்களுக்கு என்ன புடிக்காது, ஏன்னா நான்…” வெளியேறப்போவது யார்? Survivor promo
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்ம ட்ரெண்டிங்கில் புதிதாக வெற்றிநடை போட்டு வரும் நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் பிரபலங்களை வைத்து முதல் முறையாக தமிழில் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் வெளிவந்த இந்த நிகழ்ச்சிக்கு , யாருமே நினைக்காத ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு என்று கூறலாம்.

இந்த சவாலான சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் மிகவும் கடினமான போட்டிகள் வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பிரபலங்களும் இந்த காட்டில் சர்வைவ் செய்வதற்கு பாடு பட்டு வருகின்றனர். தற்போது முதல் எலிமினேஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் யார் வெளியேறப்போவது அதற்கான காரணம் என்ன என்று அனைத்து போட்டியாளர்களும் அவர்களது கருத்துகளை முன்வைக்கின்றனர். தற்போது இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in