The Indian Times

மீண்டும் வாய்ப்பளிக்கும் பாக்யா..திருந்தியதாக நடிக்கும் கோபி..| BAGYALAKSHMI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.முக்கியமாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,இவர் கோபி என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.முதல் மகனுக்கு திருமணமாகி மருமகள் உள்ளார்,இரண்டாவது மகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்.கணவன் கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை போண்டடியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நீண்ட நாட்களாக இந்த விஷயத்தினை யாருக்கும் தெரியாமல் கட்டி காப்பாத்தி வருகிறார் கோபி. ஒரு உண்மையான குடும்பத்தில் இதே போல் பிரச்சனை நடந்தால் எப்படி இருக்குமோ அதேபோல உண்மையாகவே இந்த குடும்பத்தினை சீரியல் என்று நினைக்காமல் அதையும் தாண்டி பார்த்து ரசித்து வருகின்றனர் ரசிகர்கள்.இந்நிலையில் கோபியின் மனைவி ராதிகாவின் தோழி பாக்யா என தெரியவரவே ராதிகா கோபியை விட்டு விலகி மும்பை செல்ல திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில் கோபி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.அங்கு அவரை பார்க்க ராதிகா வரவே இவர்களுக்கு இடையேயான உறவு பாக்கியாவுக்கு தெரியவந்துவிடுகிறது.இதனால் வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார் பாக்யா.

Advertisement

தற்போது இந்த தொடரின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.இந்த ப்ரோமோவில் ராதிகா திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளும் வரை பாக்கியாவை அழைத்து வந்து வீட்டில் வைத்துக்கொண்டு பின்னர் திருமணம் ஆன பிறகு பாக்கியாவை விவாகரத்து கொடுத்து வெளியே விரட்டிவிடலாம் என என திட்டம் தீட்டி,பாக்கியாவை நேரில் பார்க்க செல்கிறார்,தன்னுடன் வருமாறு பாக்கியாவை அழைக்க,திரும்ப இதுபோல் செய்ய மாட்டேன் என கூறுமாறு பாக்யா கேட்க அதற்கு நடித்து அவரிடம் சத்தியம் செய்கிறார் கோபி.இதனை கண்டுபிடித்து அவரது கையை சத்தியம் பண்ணவிடாமல் தடுக்கிறார் கோபி.இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று,அடுத்த எபிசோடின் ஆர்வத்தினை ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in