The Indian Times

குடத்தில் தாளம்…உலகநாயகன் உடன் சிங்காரி பாட்டு பாடிய நொச்சிப்பட்டி திருமூர்த்தி

சில வருடங்களுக்கு முன்னர் கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகியது.இதனை கண்ட இசையமைப்பாளர் இமான் அவரை கண்டுபிடித்து அவருக்கு தனது இசையில் பாடல் பாட வாய்ப்பினை வழங்கினார்.அண்மையில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் குலசாமி என்ற பாடலை இவர் பாடியுள்ளார்.இப்பாடல் நல்ல வரவேற்பினை பெற்றது.இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய சீறு படத்தில் செவ்வந்தியே என்ற பாடலை பாடி பாடகராக அறிமுகம் ஆகினார்.நன்றாக பாடியும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தலை பத்தலை பாடலை குடத்தில் இசையமைத்து இவர் பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ மிகப்பெரிய அளவு இணையத்தில் வைரலாகியது.அதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பயிற்சி பள்ளியில் முறையாக இசை கற்பதற்கு தேவையான செலவுகளை செய்துள்ளார்.இந்த வீடியோ பெருமளவு வைரலாகி பல மக்களிடமும் சென்றடைந்தார் திருமூர்த்தி.நிச்சயம் இவருக்கு இதற்கு பின்னர் நிறைய சினிமா பாடல் பாட வாய்ப்புகள் கிடைக்கும் என தோன்றுகின்றது

Advertisement

இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாடகர் நொச்சிப்பட்டி திருமூர்த்தி,மேடையில் கமல்ஹாசன் முன்பு குடத்தில் தாளம் போட்டு சிங்காரி சரக்கு பாடலை பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது,இதனை பார்த்த ரசிகர்கள் திருமூர்த்தி அருமையாக பாடுனீங்க என கூறி வாழ்த்துக்குக்களை கூறி கருத்து தெரிவித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.மேலும் இது கமல்ஹாசனின் பிரபலமான பாடல்களில் ஒன்று என்பதால் ரசிகர்கள் இவர் பாடுவதை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்

https://youtu.be/ovCwfjygC98

Embed video credits : singer thirumoorthi

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in