பறவைக்கு உணவு வைத்த நடிகர் KGF யாஷ்…அந்த மனசு தான் சார் கடவுள்…

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ்.இவர் முதன்முதலில் ஜம்படா என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.யாஷ் முதல் முறையாக கதாநாயகனாக நடித்த படம் 2008 ஆம் ஆண்டு வெளியாகிய ராக்கி படம் ஆகும்.அதன்பின் தொடர்ச்சியாக கன்னடத்தில் கதாநாயகனாக பல படங்களை நடித்து வந்தார்.இவர் நடிப்பில் வெளியாகிய பல படங்கள் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றது.இருந்தாலும் இவருக்கான சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.அதற்காக தான் கடுமையாக போராடி வந்தார்.இந்த போராட்டத்திற்கு பலனாக தான் கேஜிஎப் படம் இவர் கைக்கு வந்தது.இப்படத்தில் நடித்து உலக சினிமா வரை மாபெரும் உச்சம் அடைந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் CWC மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம்

பறவைக்கு உணவு வைத்த நடிகர் KGF யாஷ்...அந்த மனசு தான் சார் கடவுள்... 1

விளம்பரம்

இப்படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பினை பெற்று இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பினை கூட்டியது.இறுதியாக இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14 ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகி பலத்த வரவேற்பினை பெற்று புகழின் உச்சத்துக்கே யாஷை கொண்டு சென்றுவிட்டது.5 மொழிகளில் வெளியாகிய இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி 1000 கோடிக்கு மேல் வசூலை அள்ளி கன்னடத்தில் முதல் 1000 கோடி வசூலை பெற்ற படமாக மாறியது.தற்போது யாஷ் தனது அடுத்த பட வேலைகளை பார்க்க தொடங்கியுள்ளார்.இப்படமும் பாண் இந்திய படமாக இருக்கும் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ராகினி

பறவைக்கு உணவு வைத்த நடிகர் KGF யாஷ்...அந்த மனசு தான் சார் கடவுள்... 2

விளம்பரம்

இந்நிலையில் நடிகர் யாஷின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் வெளிநாட்டில் இருக்கும் யாஷ் உணவகத்தில் சாப்பிடும் பொழுது அங்குள்ள பறவைக்கு உணவு வைத்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,பல ரசிகர்களும் யாஷின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்,இவரை போல் நல்ல மனசு யாருக்கு வரும் என கருத்துக்களை தெரிவித்து யாஷ் ரசிகர்கள் வீடியோவை இணையத்தில் வெகுவாக ஷேர் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சந்தானம் நடிக்கும் இங்க நான்தான் கிங்கு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment