The Indian Times

டேய் மச்சி..எதையும் ஒளறிடாதடா என உதயநிதி பேசும்பொழுது மேடைக்கு பயந்து ஓடி வந்த விஷால் |LATHTHI TEASER EVENT

நடிகர் விஷால் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர்.முதல் படமே மாபெரும் ஹிட்.இதன்மூலம் தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.இப்படத்தினை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிக ர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இவர் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்,சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.இன்று இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.போலீசாக விஷால் களம் இறங்கினால் போதும் அடித்துத்துவைத்து விடுவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே,அப்போ அதை பற்றி இப்படத்தில் கேட்கவா வேண்டும்,வழக்கம்போல தனது ஸ்டைலில் எதிரிகளை பந்தாடியுள்ளார்.இந்த டீசர் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.இதில் பல கலைஞர்கள் கலந்துகொண்டு டீசரை வெளியிட்டனர்

Advertisement

இந்த நிகழ்ச்சியில் இவருடன் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாக ஒன்றாக படித்த உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு டீசரை தனது கையால் வெளியிட்டுள்ளார்..மேடையில் உதயநிதி ஸ்டாலின்,நானும்,விஷாலும் பள்ளிக்கூடம் ஒன்றாக சென்றிருக்கிறோம்,கல்லூரி ஒன்றாக சென்றிருக்கிறோம் என கூறிய உடனே பதறி அடித்து கீழே உள்ள விஷால் மேடைக்கு செல்வார்,அங்கு சென்ற விஷால் ,உதய் வேறு எதையும் சொல்லிவிடக்கூடாது என பயந்து தான் நான் மேலே வந்துவிட்டேன் என கூறினார்.நண்பர்கள் இருவரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,

Embed video credits: Vishal Film Factory

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in