காவலருக்கு SALUTE அடித்து நன்றி கூறிய நடிகர் அஜித்..என்னய்யா மனுஷன் இப்படி பந்தாவே இல்லாம இருக்காரு

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்தளவிற்கு அஜித் மேல் தீராத அன்பு கொண்டவர்களாக உள்ளனர் இவர்கள் ரசிகர்கள் .அண்மையில் இவரின் நடிப்பில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது .வசூலிலும் சாதனை படைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.தற்போது அஜித் மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில்,போனிகபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிசியாக நடைபெற்று வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

காவலருக்கு SALUTE அடித்து நன்றி கூறிய நடிகர் அஜித்..என்னய்யா மனுஷன் இப்படி பந்தாவே இல்லாம இருக்காரு 1

விளம்பரம்

அஜித்குமார் தனது 61வது படத்திற்கு கடினமாக உழைத்து வருகிறார்.இவரது வலிமை படத்தில் இவரது உடல் பருமன் குறித்து கேலி செய்து வந்தனர் அவர்களுக்கு பதிலடி கொடுப்பதுபோல் தல அஜித் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.ஏற்கனவே இதுபோல வேதாளம் படத்தில் இவரை உருவ கேலி செய்ததற்கு விவேகம் படத்தில் உடல் எடையை குறைத்து பார்ப்பவர்களை கதிகலங்க செய்தார்.தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் நடிப்பிற்கு சிறிய இடைவெளிட்டு அஜித் வெளிநாடு சென்றுள்ளார்.அங்கு பைக் பயணங்களை முடித்துவிட்டு அஜித் குமார் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை திரும்பியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

காவலருக்கு SALUTE அடித்து நன்றி கூறிய நடிகர் அஜித்..என்னய்யா மனுஷன் இப்படி பந்தாவே இல்லாம இருக்காரு 2

விளம்பரம்

சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட ட்தள அஜித் வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.விமான நிலையம் விட்டு வெளியே வந்து அவரது பெட்டிகளை அவரே காரில் எடுத்து வைத்து,வெளிவரும் வரைக்கும் பாதுகாப்பாக இருந்த காவலர்களுக்கு சல்யூட் அடித்து நன்றி தெரிவித்து சென்றுள்ளார். இன்று இருக்கும் பல நடிகர்களும் இதனை செய்வார்களா என்று தெரியவில்லை ஆனால் அஜித் சற்று மாறுபட்டவர் அனைவரையும் மதிக்க கூடியவர் என்பது இதன் மூலம் தெரிகிறது.இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.எவ்வளவு பெரிய நடிகர் தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்து செல்கிறார் என அஜித்குமாரை பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் வழிபட்ட நடிகை ஆத்மீகா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment