The Indian Times

இது வேறே லெவல் MASS ….தெலுங்கு பிக் பாஸ் டைட்டிலை தட்டி சென்ற தமிழ் நடிகை

தமிழில் வெப்பம்,களுக்கு கேடிபில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்து பிரபலமாகியவர் பிந்து மாதவி.இவர் பொக்கிஷம் என்ற தமிழ் படத்தில் நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் நடித்த கழுகு படம் தமிழில் மாபெரும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தமிழிலும் பல படங்களை நடிக்க தொடங்கினார் பிந்து மாதவி.

Advertisement

தமிழ் மொழி மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.நடிகை பிந்து மாதவி தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது சிறப்பான விளையாட்டினை மக்களுக்கு காண்பித்தார்.இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.மேலும் நன்றாக விளையாண்டும் குறைந்த ஓட்டுகள் விழுந்ததால் பிந்து மாதவி வெளியேறினார்.எப்படியாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தவருக்கு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிட்டியது.

Advertisement

அதனை சரியாக பயன்படுத்திய பிந்து மாதவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ் தெலுங்கு டைட்டிலை 50 லட்சத்துடன் தட்டி சென்றுள்ளார்.இந்த இனிமையான நிகழ்வை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.இவர் வெற்றிபெற்றதற்கு அனைத்து மொழி பிக் பாஸ் ரசிகர்களும் பிந்து மாதவிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in