மகனுடன் சாகசம் செய்த பிக் பாஸ் விஜயலக்ஷ்மி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் விஜய லட்சுமி.அதன்பின் வெங்கட் பிரபுவின் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்தி,2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து அஞ்சாதே,சரோஜா என பல தமிழ் படங்களில் நடித்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கொடி பட கதாநாயகி அனுபமாவின் அழகிய புகைப்படங்கள்

மகனுடன் சாகசம் செய்த பிக் பாஸ் விஜயலக்ஷ்மி 1

விளம்பரம்

பின்னர் சில வருடங்களாக பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் 2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாயகி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரைக்குள் நுழைந்தார்,இந்த நாடகத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததால் நாயகி நாடகத்தில் இருந்து அவர் வெளியேறினார்.பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின்னர் இவருக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.ஆனால் குறைவான வாக்கு எண்ணிக்கையினால் வீட்டை விட்டு வெளியேறினார்.பின்னர் அண்மையில் சர்வைவர் சீரிஸிலும் விளையாடி நல்ல வரவேற்பை பெற்றார்

கட்டாயம் படிக்கவும்  START MUSIC.. தளபதி குரலில் GOAT படத்தின் FIRST SINGLE TEASER வெளியாகியது

மகனுடன் சாகசம் செய்த பிக் பாஸ் விஜயலக்ஷ்மி 2

விளம்பரம்

தற்போது தனது கணவர் மற்றும் குழந்தையுடன் விடுமுறையை கொண்டாடி வருகிறார்.இதில் தனது மகன் உடன் கயிறில் பறந்து சென்ற வீடியோவை பதிவிட்டுள்ளார்.தனது மகன் பிறந்த நாள் அன்று உடன் சாகசம் செய்த இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார் விஜயலக்ஷ்மி.இந்த வீடியோவிற்கு இவரது ரசிகர்கள் சூப்பர் மேடம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் அவரது மகன் நிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment