The Indian Times

பிரபல தமிழ் பாடகி மரணம்..அதிர்ச்சியில் திரை உலகம்

கேரளா மாநிலத்தினை சேர்ந்த பிரபல பாடகி சங்கீதா சஜித்.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட என 200க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.கர்நாடக இசை கலைஞரான இவர் பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து இசை கச்சேரியும் நடத்தியுள்ளார்.இவரது ககுரலுக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,தமிழில் குறைந்த அளவு பாடல்களை பாடியிருந்தாலும் அந்த பாடல்கள் இன்று வரை நல்ல வரவேற்பினை பெற்றுள்ள பாடல்களாகும்.

நடிகர் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் ‘தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை.. தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை’ என்கிற சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார் சங்கீதா.அதேபோல் சுந்தர் சி நடிப்பில் வெளியாகிய தலைநகரம் படத்தில் சூ மந்திர காளி என்ற பாடலையும் பாடியுள்ளார்.

Advertisement

இந்நிலையில் 46 வயதான இவர் சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள அவரது தங்கை வீட்டில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரின் இந்த மறைவு செய்து ரசிகர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.மறைந்த இவருக்கு ரசிகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in