மாமா எப்போ வருவீங்க..வெளிநாடு சென்ற CWC புகழுக்காக அவர் புகைப்படத்தோடு காத்திருக்கும் பென்ஸ் ரியா

வாழ்க்கையில் கடுமையாக போராடி இன்று முன்னேறியுள்ளவர் புகழ்.முயற்சி செய்தால் எதுவும் முடியும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம் . சினிமாவில் சாதிக்க வேண்டும் என சென்னை வந்த புகழ்.ஆரம்பத்தில் சென்னையில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சினிமாவில் வாய்ப்புகளை தேடி கடுமையாக போராடி வந்தார்.அப்பொழுது தான் இவர் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் பலனாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் சிறிய வேடத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை பயன்படுத்தி விஜய்டிவியில் அடியெடுத்து வைத்தார் புகழ்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக நடிகை அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள்

மாமா எப்போ வருவீங்க..வெளிநாடு சென்ற CWC புகழுக்காக அவர் புகைப்படத்தோடு காத்திருக்கும் பென்ஸ் ரியா 1

விளம்பரம்

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் என தனது முழுத்திறமைகளையும் காண்பித்து புகழ் தனியாக அந்த நிகழ்ச்சியில் தெரிந்தார்.அவரை பலரும் கவனிக்க தொடங்கினர். கூட்டத்தில் ஒருவனாய் உள்நுழைந்த புகழ் பின்னர் தனது எதார்த்த நடிப்பு மற்றும் பேச்சுக்களால் மக்களை வெகுவாக கவர்ந்தார்.குறிப்பாக அவர் மட்டுமே தனியாக பேசக்கூடிய பெண் குரல் உண்டு அதை நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு பேசி அனைவரது மனதினையும் கொள்ளைகொண்டார் புகழ்.பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.வாய்ப்பு கிடைத்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

மாமா எப்போ வருவீங்க..வெளிநாடு சென்ற CWC புகழுக்காக அவர் புகைப்படத்தோடு காத்திருக்கும் பென்ஸ் ரியா 2

விளம்பரம்

இவர் அண்மையில் பென்ஸ் ரியா என்பவரை காதலித்து வருவதாகவும் பல ஆண்டுகளாக தாங்கள் காதல் செய்து வருவதாக அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் புகழ். தனது காதலியுடன் கரம்கோர்த்து அடிக்கடி வெளியே சென்று வருகிறார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் புகழ் வெளிநாடு செல்லும் பொழுது காதலி பென்ஸ் ரியா விமான நிலையத்தில் காதலன் புகழுக்கு பிரியா விடை கொடுத்தார்,இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகியது.இந்நிலையில் புகழ் வெளிநாட்டில் இருக்கும் பொழுது பென்ஸ் ரியா புகழ் எப்பொழுது வருவார் என்று அவரது புகைப்படத்தினை ஏக்கத்துடன் பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு காதல் இருவருக்கும்,விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment