ராக்கெட்ரி இளைஞர்கள் கட்டாயம் பார்க்க கூடிய படம் – மாதவனை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.ஒரு நல்ல படம் தமிழில் வெளியானால் படக்குழுவை தொடர்புகொண்டு வாழ்த்தும் முதல் ஆள் சூப்பர் ஸ்டார் தான்.அந்தளவிற்கு நல்ல மனிதர்.இவர் கொடுக்கும் பாராட்டுக்கள் தான் படக்குழுவிற்கு ஆஸ்கர் விருது போல அவ்வளவு மகிழ்ச்சி ஆகி விடுவார்கள்.

கட்டாயம் படிக்கவும்  3 மணி நேரம் அறுத்துட்டாங்க..படம் நல்லா இல்லை..கோப்ரா PUBLIC REVIEW

ராக்கெட்ரி இளைஞர்கள் கட்டாயம் பார்க்க கூடிய படம் - மாதவனை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

தற்போது ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தினை நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ளார்.இவர் இயக்கியுள்ள முதல் படம் இது ஆகும்.விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தினை உருவாக்கியுள்ளார்.மேலும் இப்படத்தில் நம்பி நாராயணனாகவும் வாழ்ந்துள்ளார் மாதவன் என்று கூறினால் மிகையாகாது.இப்படத்தில் இவருடன் சிம்ரன் நடித்துள்ளார்.சிறப்புத்தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்து அசத்தியுள்ளார்.இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்று அசத்தியுள்ளது.இதனால் படக்குழு மகிழ்ச்சியும் உச்சத்துக்கே சென்றுவிட்டது.

கட்டாயம் படிக்கவும்  இழுத்து ஓடும் தண்ணீரில் மிரட்டலாக BIKE ஒட்டி சென்ற தல அஜித்

ராக்கெட்ரி இளைஞர்கள் கட்டாயம் பார்க்க கூடிய படம் - மாதவனை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2

விளம்பரம்

இந்நிலையில் இப்படத்தினை பார்த்த சூப்பர் ஸ்டார்,படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது,ராக்கெட்ரி திரைப்படம் – அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் – குறிப்பாக இளைஞர்கள். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்டவர் பத்ம பூஷன் திரு. நம்பி நாராயணன்.அவர்களின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடையே நன்றிகளும், பாராட்டுகளும் என தெரிவித்துள்ளார் ,இதனால் நடிகர் மாதவன் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  குருவுடன் ஒரு சின்ன பயணம் ARR

ராக்கெட்ரி இளைஞர்கள் கட்டாயம் பார்க்க கூடிய படம் - மாதவனை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment