அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும் T.ராஜேந்தர் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட முன்னணி இயக்குனர் T.ராஜேந்தர். ,நடிகர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பல அவதாரங்களை தமிழ் சினிமாவில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.சினிமா மீதுகொண்ட காதலினால் சினிமாவை கற்று ஒருதலை ராகம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இயக்குனராக நுழைந்தவர் இவர்.இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் கவனத்தினை ஒட்டுமொத்தமாக ஈர்த்தார் ராஜேந்தர் . முதல் வெற்றியை தொடர்ந்து நம்பிக்கை வரவே படங்களை இயக்க தொடங்கிவிட்ட்டார் .இவருக்கு பெண்களை தொடாமல் நடிப்பவர் என்ற பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.அதுதான் இவரது பலமே.பின்னர் அரசியலில் இறங்கி அதன் ஆழத்தினையும் பார்த்தவர்.

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும் T.ராஜேந்தர் புகைப்படம்... 1

விளம்பரம்

இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை உள்ளது.இதில் மகன் சிலம்பரசன் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் நடிகர் ஆக உள்ளார்.இரண்டாவது மகன் குறளரசன் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார். T.ராஜேந்தர் அவர்களின் அடுக்கு மொழி வசனத்திற்கு இன்றளவுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.அதிலும் குறிப்பாக வாடா என் மச்சி வாழைக்காய் பஜ்ஜி என கூறிக்கொண்டு படத்தில் எதிரிகளை பந்தாடுவது எல்லாம் இவரால் மட்டும் முடிந்ததே.தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இந்நிலையில் டி ஆருக்கு வயிற்றில் ரத்த கசிவு இருப்பதை கண்டறிந்தனர் மருத்துவர்கள்.இதனால் இவருக்கு சிகிச்சை அளிக்க மகன் சிம்பு அமெரிக்க கூட்டி சென்றுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  இன்று ரம்ஜானை குடும்பத்துடன் கொண்டாடிய BIGGBOSS AISHU

அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும் T.ராஜேந்தர் புகைப்படம்... 2

விளம்பரம்

அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவரும் T.ராஜேந்தர் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதில் உடல் எடை மெலிந்து ஆளே அடையாளம் தெரியாதது போல் காணப்படுகிறார்.மகன் சிம்பு மற்றும் மனைவி ஆகியோர் அருகில் உள்ளனர்.இந்த புகைப்படம் ரசிகர்களிடம் கவலையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே என ரசிகர்கள் வேதனையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.நீங்கள் மீண்டும் பழையபடி திரும்பி வந்து எங்களை மகிழ்விக்க வேண்டும் என அவரை வாழ்த்தி வருகின்றனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment