The Indian Times

அதிரடியாக வெளியாகிய தளபதியின் “வாரிசு” TRAILER இதோ…

தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்படும் நடிகர் தளபதி விஜய்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளத்திலும் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் விஜய் மீது வைக்கப்பட்டது,அதையெல்லாம் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தனது பாதையில் சரியாக பயணித்து வெற்றியை தனது வசம் ஆக்கினார் மேலும் தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தினையும் உருவாக்கினார்.இவரது நடிப்பில் பல தோல்வி படங்கள் வந்தாலும்,தோல்வியை கண்டு துவளாமல் தனது வெற்றியை கொண்டு தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார் விஜய். TRAILER வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தற்போது கோடிகளில் வசூல் சாதனை படைத்தது வருகிறது.இதனால் விஜயை இயக்க பல தயாரிப்பாளர்களும்,இயக்குனர்களும் அவர் கால் ஷீட்டுக்காக காத்து கிடக்கின்றனர்.தற்போது இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கி வருகிறார்.இவர் ஒரு தெலுங்கு இயக்குனர் என்பதால் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.வாரிசு என இப்படத்திற்கு படக்குழு பெயரிட்டுள்ளது.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Advertisement

இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.இந்நிலையில் படத்தின் ட்ரைலர் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.அதன்படி தற்போது வாரிசு படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.ட்ரைலரில் தளபதி அதிரடி காட்டி மிரட்டியுள்ளார்.வழக்கமான விஜய் படம் போல அல்லாமல் சற்று வித்தியாசமாக அமைந்துள்ளதால் வாரிசு வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.ட்ரைலர் ரசிகர்களிடம் எதிர்பார்த்ததை விட அதிகமான வரவேற்பினை பெற்றுள்ளது,படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி ,வருகின்றனர்.

Embed video credits :Suntv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in