The Indian Times

அண்ணேன் நல்லா இருக்கீங்களா…. சிறிய நடிகரிடம் கூட தோளில் கைபோட்டு பேசி அன்பாக நடந்துகொண்ட சூர்யா

நடிகர் சிவகுமாரின் மகன்தான் சூர்யா.அப்பாவின் மூலம் சினிமாவுக்குள் எளிதாக வந்தாலும் தனது கடின உழைப்பை இன்று வரை அவர் விட்டதே இல்லை என்றுதான் கூற வேண்டும்.அந்தளவிற்கு பல படங்களில் உடலை வருத்தி மெனக்கெடல்களை எடுத்துள்ளார் சூர்யா.இவர் பல படங்களில் நடித்தாலும் இவருக்கு சினிமாவில் திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்று கூறினால் அது இயக்குனர் பாலா இயக்கிய நந்தா தான் இப்படத்திற்கு பிறகு தான் இவரின் திறமை உலகிற்கு தெரிந்து இவருக்கான ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

தற்போது 400 கோடி செலவில் இவரது அடுத்த படம் உருவாகி வருகிறது என்றால் அதில் சூர்யாவின் உழைப்பு மட்டுமே முழுக்க முழுக்க உள்ளது.நடிகர் சூரியாவும் இயக்குனர் ஹரியும் நல்ல நண்பர்கள் என்றே கூறலாம்,சூர்யா இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஆறு,வேல்,சிங்கம் 3 பாகங்கள் என மொத்தம் 5 படங்கள் நடித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாக இருந்த அருவா படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,விரைவில் இத்தனையும் கையிலெடுப்பார் சூர்யா என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அந்தளவுக்கு இருவருக்கும் நட்பு உள்ள நிலையில் இயக்குனர் ஹரியின் ஸ்டுடியோவை திறக்க சிறப்பு விருந்தினராக சூரியா வருகை தந்துள்ளார்.இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த காமெடி நடிகர் ஆன கிரேன் மனோகர் அங்கு சூர்யாவை பார்த்து வணக்கம் கூறவே உடனே சூர்யா அவரை கட்டியணைத்து தோளில் கைபோட்டு அன்பாக பேசி நடந்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிய நடிகரையும் சூர்யா மதித்து நடப்பது ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in