அப்பா இதெல்லாம் முன்னோர்கள் பயன்படுத்தியதா… மகளுக்கு கீழடி அருங்காட்சியகத்தை சுற்றி காண்பித்த நடிகர் சூர்யா

பிரபல பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் சூர்யா.தமிழ் சினிமாவில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இவர் ஒருவர். இவர் தனது நடிப்பால் பல ரசிகர்களையும் தனது வசம் இழுத்துள்ளார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ்,மலையாள சினிமாவில் உள்ளது.தமிழ் சினிமாவில் கிடைக்கும் அதே வரவேற்பு மலையாள சினிமாவில் கிடைக்கும் நடிகர்களில் இவர் ஒருவர் .நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நுழைந்தவர் சூர்யா.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தொடர்ந்து முயற்சி செய்து வந்த அவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா படத்தில் நடிகர் சூர்யா நடித்து தனக்கான வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொண்டார் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலையின் 60வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

அப்பா இதெல்லாம் முன்னோர்கள் பயன்படுத்தியதா... மகளுக்கு கீழடி அருங்காட்சியகத்தை சுற்றி காண்பித்த நடிகர் சூர்யா 1

விளம்பரம்

தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் 42வது படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் 10 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மேலும் 3டியில் இப்படம் வெளியாக உள்ளது.தேவி ஸ்ரீபிரசாத் இசையில்,ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க உள்ளது.இப்படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.இப்படி அடுத்தடுத்து படப்பிடிப்புகள் நடிகர் சூர்யா பிசியாக இருந்து வருகிறார்.தற்போது இவர் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மாமனார் அருண்பாண்டியன் பிறந்தநாளை கொண்டாடிய அசோக் செல்வன்

அப்பா இதெல்லாம் முன்னோர்கள் பயன்படுத்தியதா... மகளுக்கு கீழடி அருங்காட்சியகத்தை சுற்றி காண்பித்த நடிகர் சூர்யா 2

விளம்பரம்

நடிகர் சூர்யா மகள் திவ்யா மனைவி ஜோதிகா அப்பா சிவகுமார் உடன் புதியதாக தமிழக அரசால் திறக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது,சூர்யா வருவதை அறிந்துகொண்ட ரசிகர்கள் அங்கு கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் குடும்பத்துடன் சூர்யா அங்குள்ளவர்களிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

கட்டாயம் படிக்கவும்  பட்டு வேஷ்டி சட்டையில் மனைவியுடன் அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த அட்லீ

விளம்பரம்

Embed video credits : NEWS TAMIL 24X7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment