இந்த நிமிடம் இப்படியே உறையாதா..காதல் கணவருக்காக காதல் வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் விஜய லட்சுமி.அதன்பின் வெங்கட் பிரபுவின் படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்தி,2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து அஞ்சாதே,சரோஜா என பல தமிழ் படங்களில் நடித்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

இந்த நிமிடம் இப்படியே உறையாதா..காதல் கணவருக்காக காதல் வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி 1

விளம்பரம்

பின்னர் சில வருடங்களாக பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் 2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நாயகி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரைக்குள் நுழைந்தார்,இந்த நாடகத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததால் நாயகி நாடகத்தில் இருந்து அவர் வெளியேறினார்.பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின்னர் இவருக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.ஆனால் குறைவான வாக்கு எண்ணிக்கையினால் வீட்டை விட்டு வெளியேறினார்.பின்னர் அண்மையில் சர்வைவர் சீரிஸிலும் விளையாடி நல்ல வரவேற்பை பெற்றார்

கட்டாயம் படிக்கவும்  அக்கா கல்யாணத்தை முன் நின்று நடத்திய அதிதி சங்கர்

இந்த நிமிடம் இப்படியே உறையாதா..காதல் கணவருக்காக காதல் வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி 2

விளம்பரம்

தற்போது தனது மகன் மற்றும் கணவருடன் அழகிய மகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழ்ந்து வருகிறார்.தந்தையர் தினம் ஆண்டு தனது கணவருக்காக காதல் வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.அதில் உன்னை போல கணவர் கிடைப்பது பெரும் அதிர்ஷ்டம்,சிறுவயதில் நீ எப்படி இருப்பாய் என்பதை உனது அம்மாவிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்,உன்னை போல தான் எனக்கு பிள்ளை வேண்டும் என வேண்டினேன் அப்படியே உன்னை போலவே கிடைத்தது.நீ நிலனை பத்திரமாக பார்த்துக்கொள்கிறாய்,அவனுக்கு எல்லாம் சொல்லிக்கொடுக்கிறாய் என கணவர் மீது அன்பை பொழிந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  பூக்கடை போன கவலையில் அழும் மீனா.. ரோகிணியுடன் நக்கலாக சிரிக்கும் விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment