The Indian Times

விஜய் அஜித் இணைந்து நடிக்கும் பான் இந்தியா திரைப்படம்…வெளியான அதிகாரபூர்வ தகவல்

தமிழ் சினிமாவில் நெருங்கிய நண்பர்கள் விஜய் மற்றும் அஜித்.இவர்களின் படங்களுக்குள் போட்டி அதிகம் இருக்குமே தவிர இவர்களுக்குள் போட்டிகள் இல்லை அளவு கடந்த அன்பும் நட்பும் மட்டும் தான் இருக்கிறது.இருவரும் ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் இல்லை இருவரும் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் தான்.ஆனால் இது என்னவோ இவர்களின் ரசிகர்களுக்கு புரியவில்லை.அடிக்கடி இவர்களின் ரசிகர்ளுக்குள் இணையவழி போர் நடந்து வருகிறது.விஜய் படம் வெளியானால் அஜித் ரசிகர்கள் கலாய்ப்பதும்,அஜித் படம் வெளியானால் விஜய் ரசிகர்கள் படத்தினை கலாய்ப்பதும் வாடிக்கையான ஒன்றாக தமிழ் சினிமாவில் இருந்து வருவது வேதனை அளிக்கும் விஷயமா உள்ளது.

Advertisement

1995 ஆம் ஆண்டு வெளியாகிய ராஜாவின் பார்வையிலேயே படத்தின் மூலம் முதல் முறையாக இருவரும் இணைந்து நடித்தனர்.பின்னர் இருவரின் பாதைகளும் வெவ்வேறாக மாறி லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்கள்.இவர்களின் படம் தனி தனியாக வெளியாகினாலே தீபாவளி திருவிழா போல் திரையரங்கில் கொண்டாடுவார்கள் ரசிகர்கள்,தற்போது இணைந்து நடித்தால் என்னவாக ஆகும் என நினைத்து பார்த்தாலே பிரம்மாண்டமாக உள்ளது.இவர்கள் இணைந்து ஒரு படமாவது நடித்துவிடமாட்டார்களா என ரசிகர்கள் ஏங்கி வரும் நிலையில் தற்போது அந்த கனவு நினைவாக போகிறது.

Advertisement

அஜித்குமாரை வைத்து இயக்குனர் வெங்கட்பிரபு மங்காத்தா எனும் மாபெரும் வெற்றிப்படத்தினை கொடுத்தார்.இதனை தொடர்ந்து தற்போது விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளாராம்.இதனை வெங்கட் பிரபுவின் தந்தை இயக்குனர் கங்கை அமரன் அறிவித்துள்ளார்.மேலும் இது பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.இதனால் இருவரின் ரசிகர்களும் சந்தோசத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளனர்.இந்த செய்தி காட்டுத்தீ போல இணையத்தில் பரவி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in