The Indian Times

எங்கம்மா என் சாமி என்ன விட்டு போய்ட்டு… தாயை இழந்து உடைந்து போன வடிவேலு

வடிவேலு தமிழ் சினிமாவை கலக்கி வரும் புயல் .இதனாலேயே இவருக்கு என்னமோ வைகைப்புயல் என பெயர் வைத்துள்ளார்கள் போல.இவரின் நகைச்சுவையை பார்த்தால் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் ஓடிவிடும்.பல மக்களின் கவலையை போக்கிய வைத்தியர் இந்த வடிவேலு என்று கூறினால் மிகையாகாது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காமெடியன் கதாநாயகன் என இரண்டிலும் சினிமாவை ஆட்டம் காண வைத்தவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

என் தங்கை கல்யாணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி தனியாக நகைச்சுவை நடிகராக உருமாறி வலம் வர தொடங்கினார்.பல படங்கள் இவரின் நகைச்சுவைக்காகவே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.தற்போது சில ஆண்டுகளாக இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுக்கு இடையே இருந்த பிரச்சனைகளினால் படங்கள் நடிக்காமல் இருந்தார்

Advertisement

தற்போது இவர் தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அண்மையில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் லைக்கா நிறுவன தயாரிப்பில் வடிவேலு நடித்த நாய் சேகர் படம் திரையரங்குகளில் வெளியாகியது.இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,தற்போது இன்று நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி இயற்கை எய்தினார்.ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவர்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.தாயை இழந்து கலங்கி போயுள்ளார் வடிவேலு,இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபொழுது அம்மா உடம்பு சரி இல்லாமல் அப்போலோ மருத்துவமனையில் இருந்தார் ,பின்னர் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் என கூறியுள்ளார்.

Embed video credits : BEHINDWOODS AIR

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in