நாங்களும் மனிதர்கள் தான்..பிடிக்கலைன்னா ஏன் இப்படி திட்டுறீங்க.. கலங்கிய VJ அர்ச்சனா மற்றும் அவரின் மகள் சாரா…!!

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

நமக்கு மிகவும் பிரபலமானவர் VJ அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “காமெடி டைம்” என்னும் நிகழ்ச்சியை சிட்டி பாபு அவர்களுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். அதன் மூலம் சின்னத்திரை, வெள்ளித்திரை என பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருந்தார். பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட இவர் “அன்பு ஜெயிக்கும் நம்புறியா” என்ற வார்த்தை மூலம் மேலும் பிரபலமானார். பிக்பாஸுக்குப் பிறகு இவரை கலாய்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது.

கட்டாயம் படிக்கவும்
செருப்பை போட்டு ஜோடியை தேர்ந்தெடுக்கும் ராமர்! காமெடி ராஜா கலக்கல் ராணி Promo

நாங்களும் மனிதர்கள் தான்..பிடிக்கலைன்னா ஏன் இப்படி திட்டுறீங்க.. கலங்கிய VJ அர்ச்சனா மற்றும் அவரின் மகள் சாரா...!! 1

விளம்பரம்

 

இவருக்கு சாரா என்ற மகள் உண்டு. அவரும் அர்ச்சனாவுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பங்கேற்று வருகிறார். ஆனால் இவர்கள் இருவர் மீதும் நெட்டிசன்கள் பல விமர்சனங்களை வாரி இறைத்து வருகின்றனர்.! சமீபத்தில் இவர்கள் தங்கள் Youtube பக்கத்தில் வெளியிட்ட பாத்ரூம் Tour வீடியோ மிகப்பெரும் சர்ச்சையானது. அந்த வீடியோ வெளியான பிறகு நெட்டிசன்கள் இவர்கள் இருவரையும் கலாய்த்து எடுத்துவிட்டனர். அதன் பிறகு சில காலம் எந்த சர்ச்சரவிலும் சிக்காமல் இருந்து வந்தனர்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்
இளம் வயதில் நம்ம செஃப் தாமு எவ்ளோ ஒல்லியா இருக்காரு பாருங்க!

நாங்களும் மனிதர்கள் தான்..பிடிக்கலைன்னா ஏன் இப்படி திட்டுறீங்க.. கலங்கிய VJ அர்ச்சனா மற்றும் அவரின் மகள் சாரா...!! 2

ஆனால் தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் “தாயில்லாமல் நானில்லை” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் சாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது எதிர்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் சமீபகாலமாக எங்களுக்கு மிகவும் மோசமான வார்த்தைகளில் கமெண்ட்கள் வருவதாகவும் குறிப்பாக ஒரு  பெண்ணிடம் இருந்து அவ்வாறு தகாத வார்த்தைகள் வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு நடுவில் சில நல்ல கமெண்ட்களும் வருவதாகவும், அதற்காக நன்றியும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்தை நான் மிகவும் மதிக்கிறேன் ஆனால் அதை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள்.. “நாங்களும் மனிதர்கள்தான்” நீங்கள் எங்கள் மீது அன்பை கொடுக்க வேண்டாம் ஆனால் வெறுப்பைக் காட்ட வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்..

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்
இந்த வார Elimination அஸ்வினா பவித்ராவா..? - குக் வித் கோமாளி ப்ரோமோ வீடியோ


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment