The Indian Times

உலகளவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் பாதிப்பு! இந்தியாவில் அதிகளவில் பரவி வரும் பெருந்தொற்று

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகளவில் பரவி வருகிரது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் மட்டும் 2 கோடிக்கும் மேல் மக்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னதான் அரசாங்கம் மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள வற்புறுத்தினாலும், ஊரடங்கு அறிவித்தாலும் மக்கள் அதை சரியாக கடைபிடிப்பதில்லை.

Advertisement

இந்தியளவில் மட்டுமல்ல உலகளவில் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் உலகளவில் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து விநியோகம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸ் மூலமாக விநியோகம் செய்யப்படும் தடுப்பூசி அடுத்த மாதத்திற்குள் 190 மில்லியன் அளவிற்கு பற்றாற்குறை ஏற்படும் என்று உலக சுகாதார துறை அமைப்பு அறிவித்துள்ளது.

Advertisement

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தடுப்பு மருந்துகள் கோவாக்ஸ் என்ற பிரிவின் மூலம் உலகளவில் சுமார் 2 பில்லியன் தடுப்பு மருந்துகளை விநியோகம் செய்ய யோசித்திருந்தது. ஆனால் தற்போது இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தோற்று அதிகரித்துள்ளதால் இந்த விநியோகம் பெரியளவில் பதிக்கப்பட்டுள்ளது.

அதிலும் இந்த இரண்டாவது அலை பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் 190 மில்லியன் அளவிற்கு பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்துகள் சரியாக விநியோகம் செய்யப்படும் நாடுகளில் கொரோனா தோற்று கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

Advertisement

அந்த நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் கோவிட் தொடர் அதிகரித்து வரும் நிலையில் விநியோகம் பாதிப்படையும் நிலையில் , இந்த நிலைமை தொடர்ந்தால் இது மிக பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று உலக சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in