The Indian Times

சோழர்கள் கதையை முடிக்க ரத்தத்தினால் உறுதிமொழி எடுக்கும் பாண்டியர்கள்… பொன்னியின் செல்வன் PROMO

தமிழ் சினிமாவையே புரட்டிப்போட இருக்கும் பிரமாண்டமான பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிற மொழி படங்கள் பெருமளவு வெற்றி பெற்று வருகிறது.தெலுங்கு,கன்னட படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை சுலபமாக பெற்று வருகிறது.ஆனால் தமிழ் சினிமா தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.தற்போது பல நடிகர்கள் பட்டாளத்துடன் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவை மீண்டும் தலைநிமிர செய்யும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இயக்குனர் மணிரத்தினத்தின் நீண்ட நாட்கள் கனவு பொன்னியின் செல்வன். இப்படத்தினை எப்படியாவது இயக்கிவிட வேண்டும் என ஆவலுடன் இருந்தார்.இறுதியாக அதற்கான நேரமும் வந்தது.இப்படத்தினை விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி,த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயராம் என பலரையும் நடிக்க வைத்து சோழர்களின் பிரம்மாண்ட காவியத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு பிரமாண்டமாக இசையமைத்துள்ளார்

Advertisement

தற்போது இப்படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்யும் விதமாக படத்தின் ப்ரோமோவை வெளியிட்டு வருகிறது படக்குழு அதன்படி தற்போது பாண்டியர்கள் சோழர்களை பழிவாங்க உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : Moviebuff tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in