ROLEX பார்த்தா பயமா இருக்கு ரொம்ப …நடிகர் கார்த்தி

நடிகர் உலகநாயகன் கமலஹாசன் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடித்திருக்கும் படம் விக்ரம்.இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.படத்தில் மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில்,காளிதாஸ் ஜெயராம்,நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இறுதியாக நடிகர் சூர்யா வந்து கலக்கியுள்ளார்.இப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  நடிகர் கிச்சா சுதீப் வீட்டுக்கு விருந்துக்கு காதலனுடன் சென்ற வரலட்சுமி

ROLEX பார்த்தா பயமா இருக்கு ரொம்ப ...நடிகர் கார்த்தி 1

விளம்பரம்

வெளியாகி 4 நாட்களுக்குள்ளே உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்து அசரவைத்துவிட்டது.வில்லனாக விஜய் சேதுபதி கலக்கியுள்ளார்.இப்படம் லோகேஷ் முன்னதாக இயக்கிய கைதி படத்தின் தொடர்கதையாக வருகிறது.இறுதியில் வில்லனாக வரும் சூர்யா கைதி 2ஆம் பாகத்திலும்,விக்ரமின் 3வது பாகத்திலும் வில்லன் ஆக நடிப்பார் என்பது இப்படத்தினை பார்க்கும் பொழுதே தெரிகிறது.அனைவரும் அடுத்ததாக டில்லி மற்றும் ரோலேக்ஸ் மோதலுக்காகத்தான் காத்து இருக்கின்றனர்.கைதி 2 ஆம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்தது வணங்கான் படப்பிடிப்பு... வெளியாகிய புகைப்படங்கள்

ROLEX பார்த்தா பயமா இருக்கு ரொம்ப ...நடிகர் கார்த்தி 2

விளம்பரம்

இப்படத்தினை பார்த்த கார்த்தி கூறியதாவது,கமல் சாரை கொண்டாடும் வகையில் படம் அமைந்துள்ளது,ஆக்ஷன் காட்சிகள் வேறே லெவெலில் இருந்தது.பகத் பாசில் நல்ல நடித்துள்ளார்,விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்திற்கு புது பரிமாணத்தினை ஏற்படுத்தியுள்ளார்.அனிருத் மியூசிக் வேறெலெவெல் .கடைசியா ரோலெக்ஸ் பார்க்கும் பொழுது ரொம்ப பயமா இருந்தது.மொத்தத்துல படம் சூப்பர் என கருத்து தெரிவித்துள்ளார்.கைதி 2 ஆம் பாகத்தில் சூர்யா வில்லன் ,கார்த்தி ஹீரோவாக நடிப்பதும் உறுதியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

விளம்பரம்

Embed video credits : we talkies

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment