The Indian Times

என்ன பண்ணிடலாம்..இடத்தை காலி பண்ணிடலாமா..வித்யுலேகாவை பங்கம் செய்த KPY பாலா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எப்பொழுது சனி ஞாயிறு வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்துள்ளது இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .ஒவ்வொரு வராமும் இவர்கள் எந்த கெட்டப்பில் வருவார்கள் என்று எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் பலர் வெளியேறி இறுதியாக அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா மற்றும் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் இணைந்துள்ளனர்.இவர்களுக்கிடையே தற்போது போட்டி பலமாக நடந்துகொண்டு வருகிறது.இன்னும் வைல்ட் கார்டில் இருந்து சென்ற குக்குகள் மீண்டும் வந்தால் அதகளம் தான் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு சமையல் செய்து வருகின்றனர்.சமையல் மட்டும் இல்லாமல் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் காமெடி கலவரம் செய்து வருகின்றன

Advertisement

கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் சூப்பர் ஸ்டார் ரஜினி கதாபாத்திரத்தில் வந்து அசத்தி வந்தனர்.அதில் பாலா வித்யுலேகாவிற்கு கோமாளியாக கிடைத்துள்ளார்.முன்பு நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள குக்குகளிடம் இருந்து நடப்பு போட்டியாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் அதில் இந்த வாரம் அவர்கள் செய்யபோகிற சமையலும் அடங்கியுள்ளது.அதன்படி தனக்கு வந்த சமையல் குறிப்பை பார்த்து பண்ணிடலாம் என வித்யூலேகா சொல்ல,அதற்கு பாலா என்ன பண்ணிடலாம்..இடத்தை காலி பண்ணிடலாமா என கேட்டு கலாய்த்துள்ளார்.இந்த வீடியோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது,இந்த வீடியோ இணையத்தளத்தில் தற்போது பெருமளவு வைரலாகி வருகிறது

https://youtu.be/iuVDLGK0Ccs

Embed video credits : Vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in