The Indian Times

நான் என்னோட செல்லம் நயன்தாராவை கல்யாணம் பண்ணிக்க போறேன்…விக்னேஷ் சிவன் கொடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு,கொண்டாடத்தில் ரசிகர்கள்

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகையும் வெளி உலகையும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இருவரும் அடிக்கடி கோவில் மற்றும் சுற்றுலா சென்று புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.இவர்கள் பதிவேற்றும் இந்த புகைப்படங்கள் தான் அன்று இணையத்தில் பேசப்படும் முக்கிய பேசுபொருளாக மாறுகிறது,அந்த அளவிற்கு இவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.எப்பொழுது இவர்கள் திருமணம் செய்துகொள்ளுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.ஜூன் 9 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் என தகவல் வெளியாகி இருந்தது ஆனால் அதுகுறித்து இன்றுவரை நடிகை நயன்தாராவும்,இயக்குனர் விக்னேஷ் சிவனும் எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை.இதனால் ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் இன்று இயக்குனர் விக்னேஷ் சிவன்,தனது கல்யாணத்தினை பற்றி கூற சென்னை தாஜ் கிளப் ஹவுசில் பத்திரிகையாளர் சந்திப்பினை ஏற்படுத்தியிருந்தார்,இதில் பேசிய அவர் கூறியதாவது,போடா போடி படத்தின் மூலம் இயக்குநரா அறிமுகம் ஆனேன்,அன்றிலிருந்து இன்று வரைக்கும் எனக்கு நீங்க சப்போர்ட் பண்றிங்க,இப்போ தயாரிப்பாளராவும் இருக்கேன்,அதற்கும் நீங்க கொடுத்த சப்போர்ட் தான் காரணம்,நான் என்னுடைய காதலி நயன்தாராவை வருகிற ஜூன் 9 ஆம் தேதி கல்யாணம் பண்ண போறேன்.மகாபலிபுரம்ல வச்சி கல்யாணம் நடக்க போகுது என அதிகாரபூர்வகமா தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்களும் கொண்டாடத்தின் உச்சியில் உள்ளனர்

Embed video credits : Nakkheeran studio

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in