விக்ரம் வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பிரம்மாண்ட பரிசு வழங்கிய நடிகர் கமல்ஹாசன்..என்ன பரிசு தெரியுமா?

நடிகர் உலகநாயகன் கமலஹாசன் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடித்திருக்கும் படம் விக்ரம்.இப்படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.படத்தில் மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில்,காளிதாஸ் ஜெயராம்,நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இறுதியாக நடிகர் சூர்யா வந்து கலக்கியுள்ளார்.இப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இன்று வாக்களிக்க வந்த தமிழ் சினிமா பிரபலங்கள்

விக்ரம் வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பிரம்மாண்ட பரிசு வழங்கிய நடிகர் கமல்ஹாசன்..என்ன பரிசு தெரியுமா? 1

விளம்பரம்

படத்தில் அனிருத் இசை பட்டையை கிளப்பியுள்ளது.கமல்ஹாசன் எழுதி பாடிய பத்தலை பத்தலை பாடல் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பட்டிதொட்டியெங்கும் இப்பாடல் ஒலித்து வருகிறது.படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார்,இதுவரை அவர் வில்லனாக நடித்துள்ள படங்களில் இந்த படத்தில் அவர் தனது மொத்த வில்லத்தனத்தினையும் காண்பித்து அசத்தியுள்ளார்.படத்தில் இறுதி காட்சியில் சூர்யா தோன்றினாலும் அடுத்த பாகத்தில் அவருக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளார்.இப்படத்தின் அடுத்த பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  Congratulation கோபி... நீங்க அப்பாவாக போறீங்க.. டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாகிய கோபி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

விக்ரம் வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு பிரம்மாண்ட பரிசு வழங்கிய நடிகர் கமல்ஹாசன்..என்ன பரிசு தெரியுமா? 2

விளம்பரம்

தற்போது விக்ரம் படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடியை வசூலித்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.தொடர்ந்து சரிவை கண்ட தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியுள்ளது இந்த விக்ரம் என்று கூறினால் மிகையாகாது.தற்போது இப்படத்தினை நடிகராகவும்.தயாரிப்பாளராகவும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை சந்தித்துள்ளார் உலகநாயகன்,இதனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு புதியதாக கார் ஒன்றை பரிசளித்து மகிழ்ந்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment