The Indian Times

கணவரின் அஸ்தியை கொண்டு கனத்த இதயத்துடன் வீடு திரும்பிய மீனா

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்தவர் இவர்.இவர் நவயுகம் என்ற படத்தில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.பின்னர் தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் மீனா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழ் சினிமாவில் இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை சேர்த்துக்கொண்டு பல வெற்றிப்படங்களை தமிழில் அளித்தவர்.ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார் மீனா.அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய அண்ணாத்த படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்.தற்போது வயது ஆகிவிட்டதால் கதாநாயகியாக நடிக்காமல் குண சித்திர வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல படங்கள் நடித்து மக்களின் மனதினை கவர்ந்துள்ளார் மீனா .மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார்

Advertisement

மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு இயற்கை எய்தினார்.இந்த செய்தி ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல திரை பிரபலங்களும் இன்று நேரில் சென்று மீனா கணவர் வித்யாசாகருக்கு அஞ்சலி செலுத்தினர்.இன்று மாலை அவரது உடல் மயானத்தில் எரியூட்டப்பட்டது.கணவரின் அஸ்தியை வாங்கிக்கொண்டு கண்களில் கலக்கத்துடன் மீனா வந்த வீடியோ வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Embed video credits : Thanthitv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in