செருப்பை தொடாதீங்க PLEASE ….இதுதான் தலைவர்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த் .இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால்.இவர் பேச்சு,நடிப்பு,ஸ்டைல் என எல்லாவற்றையும் பிரித்து ரசித்து பார்க்கும் அளவிற்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை கூட்டியுள்ளார்.இவர் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாவதால் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாரதி கண்ணம்மா வில்லி பரீனா மகனின் 2வது பிறந்தநாள் கொண்டாட்டம்

செருப்பை தொடாதீங்க PLEASE ....இதுதான் தலைவர் 1

விளம்பரம்

ஹீரோ முதல் வில்லன் வரை என எல்லா கதாபாத்திரத்திலும் நடித்து சினிமா உலகினையே ஆச்சரியப்பட செய்தார்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கே கொண்டு சென்றுவிட்டார் என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு சினிமாவில் அடியெடுத்து நாள் முதல் இன்று வரை உழைத்துள்ளார்.இவர் படம் தோல்வி அடைந்தாலும் இவரை தாங்க ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இதனால் அடுத்த படமே பிரம்மாண்ட வெற்றிப்படமாக மக்களுக்கு கொடுப்பார்.உடல்நிலை சரியாக இல்லாத போதும் ரசிகர்களுக்காகவே ஆண்டுக்கு ஒரு படத்தினை நடித்து வருகிறார்.வயசாகினாலும் இவரது படங்கள் கோடிகளில் வசூல் சாதனை படைத்தது வருவது குறிப்பிடத்தக்கது.அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிப்பில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகியது,பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகிய இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பினை பெற தவறிவிட்டது.வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான் ஆனால் அதையெல்லாம் சூப்பர் ஸ்டார் கண்டுகொள்ளாமல் அடுத்த படத்தில் மக்களை மகிழ்விக்க முடிவெடுத்து சிறந்த இயக்குனரை தேர்வு செய்ய தொடங்கினார்.தற்போது இயக்குனர் நெல்சன் சூப்பர் ஸ்டாரிடம் கூறிய கதை அவருக்கு பிடித்துப்போகவே இப்படத்தினை சன் பிக்சர் இயக்க ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் பொற்கோவிலில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகன் தீபக் சுவாமி தரிசனம்

செருப்பை தொடாதீங்க PLEASE ....இதுதான் தலைவர் 2

விளம்பரம்

நேற்று இவர் சக நடிகை மீனாவின் கணவர் இறந்தது குறித்து கேள்விப்பட்டு நேரில் மீனாவின் வீட்டிற்கு சென்று அவரது கணவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.பின்னர் அங்கிருந்து திரும்பி வாசல் வந்து அவரது காலணியை எடுத்து மாட்டும் பொழுது அருகில் இருந்தவர் உடனே ரஜினிக்கு உதவி செய்ய அவரின் காலணியை தொட்டார்,உடனே பதறிய ராஜினிகாந்த் ப்ளீஸ் அதையெல்லாம் பண்ணாதீங்க என கூறியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் சூப்பர் ஸ்டார்,அதான் இவரின் நல்ல மனசு என கோரி புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment