எதிரிகளை ஏறி மிதிக்கும் அருண்விஜயின் YAANAI GLIMPSE

பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்.தந்தையை போல பிரபல நடிகர் ஆக வேண்டும் என கனவுடன் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.பிரபல நடிகரின் மகன் என்பதால் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தது அர்ஜுன் விஜய்க்கு.இவர் 1995 ஆம் ஆண்டு முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு நுழைந்தார்.இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் எதிர்பார்த்த வரவேற்பு இவருக்கு சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்.சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும் இவர் கடின உழைப்பு இவரது படங்களில் தெரியும்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  90ஸ் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் உடன் உணவருந்த சென்ற சுஹாசினி

எதிரிகளை ஏறி மிதிக்கும் அருண்விஜயின் YAANAI GLIMPSE 1

விளம்பரம்

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏதுவாக இவருக்கு என்னை அறிந்தால் படத்தில் அஜித்குமாருக்கு வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி படத்தில் நடித்து அனைவரையும் நடிப்பில் மிரட்டி இருந்தார்.இந்த படத்தில் அருண் விஜய்க்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவரும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர் என்ற அந்தஸ்தினை பிடித்தார்.அதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு தொடர்ந்து நடித்து வருகிறார்.தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்துள்ளார்.இப்படம் ஜூன் 17 ஆம் தேதி திரைக்கு வர இருந்த நிலையில் கமல்ஹாசனின் விக்ரம் படம் வெற்றிகரமாக ஓடி வருவதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது,இதனால் படத்தின் வெளியீடு தேதியை ஜூலை 1 ஆம் தேதி தள்ளிவைத்து அறிவித்தது படக்குழு

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் CWC மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம்

எதிரிகளை ஏறி மிதிக்கும் அருண்விஜயின் YAANAI GLIMPSE 2

விளம்பரம்

இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்,ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.ராதிகா,அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.தற்போது படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. வழக்கமான ஹரி படம் போல சண்டை காட்சிகளில் பிரித்து எடுத்து அசத்தியுள்ளார்.அருண் விஜய் படத்தில் எதிரிகளை பறக்க விட்டு அடித்துள்ளதை இந்த கிளிம்ப்ஸ் காட்சிகளில் காணலாம்.படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அதிரடி வசனங்களும் நிறைந்துள்ளது.இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட BIGGBOSS ஜோவிகா வனிதா

விளம்பரம்

Embed video credits :  DRUMSTICKS PRODUCTIONS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment