தந்தை வித்யாசாகருக்கு இறுதி சடங்கு செய்யும் பேபி நைனிகா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா.தமிழில் மட்டும் இல்லாமல் பல மொழி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.இவருக்கென தமிழ் சினிமாவில் 90களில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல முன்னணி கதாநாயகர்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார் மீனா.தமிழில் இவர் கதாநாயகியாக நடித்த என் ராசாவின் மனசிலே பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றது.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தற்போது தமிழ் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நண்பா வரட்டுமா..யானைக்கு டாட்டா போட்ட நடிகர் யோகி பாபு

தந்தை வித்யாசாகருக்கு இறுதி சடங்கு செய்யும் பேபி நைனிகா... 1

விளம்பரம்

ரஜினிகாந்த் நடிப்பில் முத்து படத்தில் கதாநாயகியாக நடித்தார்,கமல்ஹாசன் நடிப்பில் அவ்வை சண்முகி படத்தில் கதாநாயகியாக நடித்தார்,அஜித்குமார் நடிப்பில் வில்லன் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்தார்.இந்த மூன்று படங்களுமே அவருக்கு பெரும் ஹிட் படங்கள் ஆகும்.மேலும் பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ளார் மீனா.இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.இவர் தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  மூக்குத்தி முருகனை பங்கமாக கலாய்த்த MAKAPA ஆனந்த்...

தந்தை வித்யாசாகருக்கு இறுதி சடங்கு செய்யும் பேபி நைனிகா... 2

விளம்பரம்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நுரையீரல் பாதிப்பு ஏற்கனவே இருந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.இந்த செய்தி சினிமா பிரபலங்களுக்கும்,ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தினையும் ஏற்படுத்தியது.பல நடிகர் மற்றும் நடிகைகள் மீனாவின் கணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அவரது மகள் நைனிகா தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கை செய்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.எந்த ஒரு மகளுக்கும் நேரக்கூடாத ஒன்று சிறுவயதில் நைனிகாவிற்கு நேர்ந்துள்ளது நெஞ்சை பிழிகிறது.

கட்டாயம் படிக்கவும்  ஐயோ..அம்மா...சண்டை காட்சியில் கோமாளி பட கதாநாயகிக்கு கால் முறிவு

விளம்பரம்

Youtube Embed video credits : A to Z 360

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment