The Indian Times

இது ராக்கி பாய் இல்லை….நான் வளர்த்த ராக்கி நாய்…குரேஷியை பங்கமாக கலாய்த்த வெங்கடேஷ் பட் | cook with comali

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனை தொடர்ந்து இந்த சீசனில் புதியதாக சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் இணைந்துள்ளார்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.இதனால் நாளுக்கு நாள் நகைச்சுவையும் போட்டியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்த வார ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

Advertisement

இந்த வாரமும் கோமாளிகள் பிரபல நடிகைகளை போல வேடமணிந்து வந்து காமெடி செய்து மக்களை மகிழ்விக்க உள்ளனர்.குரேஷி கேஜிஎப் படத்தின் ராக்கி பாய் வேடத்தில் மாஸ் ஆக என்ட்ரி கொடுத்தார்.ஆனால் வெங்கடேஷ் பட் என்னடா ராக்கியை கூப்பிட்டா நான் வளர்த்த ராக்கி நாய் மாறி வந்திருக்கே என கூறி குரேஷியை பங்கமாக கலாய்த்துள்ளார்.இந்த ப்ரோமோ மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ப்ரோமோவை கண்டு மக்கள் வயிறுகுலுங்க சிறித்துள்ளனர்.இந்த ப்ரோமோ இந்த வார நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை மக்களிடம் அதிகரித்துள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in