The Indian Times

ரசிகருக்கு போன் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய தல அஜித்…வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையை அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 61 வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது

Advertisement

இந்நிலையில் கிடைக்கும் இடைவெளியில் நண்பர்களுடன் பைக் பயணம் செய்து வருகிறார்.இதுவரை இந்தியாவின் உள்ளே பயணித்த தல அஜித்குமார் முதல் முறையாக வெளிநாட்டில் பைக்கில் பயணம் செய்து வருகிறார்.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.அதுமட்டுமின்றி தற்போது தல அஜித் தனது ரசிகரை போனில் தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார் மேலும் அவரு தனது கைப்படவே வாழ்த்துக்கள் கடிதத்துடன் தனது கையொப்பத்தையும் பதிவு செய்து அனுப்பியுள்ளார்.இந்த வீடியோ தல ரசிகர்கள் வெறித்தனமாக இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

https://www.youtube.com/shorts/_SvY1HjtELE

Embed video credits : Tag Chennai

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in