The Indian Times

மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதியாகிருக்கும் இயக்குனர் சிறுத்தை சிவா தம்பி நடிகர் பாலா

சவுர்யம் என்ற தெலுங்கு திரைப்படத்தினை இயக்கி சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளவர் சிவா.அடுத்தடுத்து தெலுங்கில் வெற்றிப்படங்களை கொடுக்க தொடங்கினார்.பின்னர் தெலுங்கில் இருந்து நடிகர் கார்த்தியை வைத்து தமிழில் சிறுத்தை படத்தினை இயக்கினார்.இப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிவாவுக்கு சிறுத்தை சிவா என பெயரே வந்துவிட்டது.இப்படத்தினை தொடர்ந்து இவர் அஜித்தை வைத்து இயக்கிய வீரம்,வேதாளம்,விவேகம்,விஸ்வாசம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்.

Advertisement

பின்னர் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய அண்ணாத்த படம் பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது.இப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவை வைத்து 500 கோடி பட்ஜெட்டில் மிகப்பெரிய படத்தினை இயக்கி வருகிறார் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் சுமார் 10 மொழிகளில் வெளியாக உள்ளது,இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.இந்நிலையில் சிறுத்தை சிவா தம்பியும் நடிகருமான பாலா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

நடிகர் பாலா வீரம் படத்தில் அஜித்திற்கு சகோதரராக நடித்திருந்தார்.இவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தற்போது நடைபெற்றுள்ளது.அவரை காண சிறுத்தை சிவா மருத்துவமனையில் காத்திருக்கின்றார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in