The Indian Times

பையனை கூட்டிட்டு பார்த்து வா விக்கி.. இரட்டை குழந்தைகளுடன் விமான நிலையம் வந்த நயன்தாரா

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நல்ல வரவேற்பினை பெற்று முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார். தமிழ் சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.தொகுப்பாளராக தான் வாழ்க்கையை தொடங்கியவர் இன்று இன்று தனது கடின உழைப்பினால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தினை மக்களிடம் வாங்கியுள்ளார்.தற்போது இவர் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இதில் நெற்றிக்கண் திரைப்படம் நேரிடையாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இதனை தொடர்ந்து மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான O2 படத்தில் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து அண்மையில் நயன்தாரா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை

Advertisement

தற்போது நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது மகன்களுடன் விமான நிலையம் வருகை தந்துள்ளார்.இருவரும் ஆளுக்கொரு குழந்தையை தூக்கிக்கொண்டு விமான நிலையம் வந்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் குழந்தைகள் முகத்தினை காண்பியுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.வீடியோ இணையத்தில் பயங்கர ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in