நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்,ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இன்று சினிமாவில் உச்ச இடத்தினை பிடித்துள்ளார்.முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.இவருக்கென தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி நடித்த திரைப்படம் தனி ஒருவன்.இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.இப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.இப்படத்தின் வெற்றியினை தற்போது வரை ஜெயம் ரவி தக்கவைத்து கொண்டு தான் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது
வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க மக்களை வெகுவாக கவர்ந்தார்.இயக்குனர் அமீர் இயக்கத்தில் இவர் நடித்த ஆதிபகவன் திரைப்படம் இவரின் நடிப்பினை உலகிற்கு கொண்டு வந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் அடித்து துவைத்து இருப்பார்.தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் படத்தின் இரண்டாவது பாகம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது
நடிகர் ஜெயம் ரவியை வைத்து பூலோகம் எனும் படத்தினை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் என்பவர் ஜெயம் ரவியை வைத்து மீண்டும் அகிலன் என்ற படத்தினை இயக்கியுள்ளார்.இதில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது. இப்படம் மார்ச் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.தற்போது படத்தின் சில நிமிட காட்சிகளை வெளியிட்டுள்ளது படக்குழு.படத்தில் அகிலன் போலீசுக்கு எதிராக குற்றவாளிகளை கப்பல் மூலம் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கின்றார்.இந்த சில நிமிட காட்சிகளே ரசிகர்களுக்கு திக் திக் நிமிடங்களாக அமைந்துள்ளது.
Embed video credits : MOVIEBUFF TAMIL
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in