The Indian Times

பாலிவுட்டில் ஷாரூக்கானுடன் இனைந்து கலக்கிய தல அஜித்! எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித்.

தல ரசிகர்கள் நீண்டநாட்களாக ஆர்வமாக காத்திருப்பது வலிமை படத்திற்காக தான். இந்த படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் , வலிமை படத்தின் அப்டேட் கிடைக்காமல் தல ரசிகர்கள் மிகவும் சோகத்திற்குள்ளாகியுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் தற்போது தன்னுடைய பாலிவுட் நண்பரான பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானுடன் தல அஜித் சேர்ந்து நடித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர்கள் இனைந்து நடித்த திரைப்படத்தின் பெயர் அசோகா.

இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்க 2001 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. வலிமை அப்டேட் காக காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் ஆறுதல் அளிக்கும் என்று நினைக்கின்றோம்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in