The Indian Times

போலீஸிடம் விஜய் பட பாடலை பாடி மாஸ் காட்டிய சூப்பர் சிங்கர் பூவையார்!

விஜய் டிவியில் நீண்ட காலமாக அதிக ரசிகர்களை தக்க வைத்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். சூப்பர் சிங்கர் சீனியர், ஜூனியர் என்று கலக்கிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் பங்கு பெட்ரா பல போட்டியாளர்களுக்கு படவாய்ப்புகளும் கிடைத்திருக்கிறது.

Advertisement

அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் மூலம் படத்தில் என்ட்ரி கொடுத்தவர் தான் பூவையார். பீகில் படத்தின் வெறித்தனம் பாடலில் துவங்கி , சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பூவையார். விஜயோடு நடித்தது மட்டுமல்லாமல் விஜயின் இடுப்பிலேயே ஏறி ஒக்காந்த பெருமையும் இவருக்கு உண்டு. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு அதிகமாக படவாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கின்றது.

Advertisement

இந்நிலையில் பூவையார் போலீசார் மத்தியில் பாட்டு பாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதுவும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தேறி படத்தில் இருந்து ஜித்து ஜில்லாடி பாடலை பாடியுள்ளார். தற்போது விஜய் ரசிகர்கள் இந்த விடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in