The Indian Times

Hit படங்களை கொடுத்தும் காணாமல் போன இயக்குனர்கள்! இவுங்க எடுத்த படமா இதுலாம்?

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு சில ஹிட் படங்களை கொடுக்கும் டைரக்டர்களுக்கே அடுத்ததாக பெரிய ஹீரோக்களை இயக்க வாய்ப்பு கிடைத்து விடுகிறது. ஆனால் முந்தைய காலத்தில் பெரிய ஹீரோக்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர்கள் இன்று காணாமல் போய் விட்டனர்.

Advertisement

அதில் முதலாக இருப்பவர் பிரதாப் போத்தன். இவர் சமீபகாலமாக துணை நடிகராக நடித்து வந்தாலும் ஒரு காலத்தில் மாபெரும் ஹிட் கொடுத்த டைரெக்டர்களுள் இவரும் ஒருவர். அந்த வகையில் இவர் இயக்கத்தில் கமல் , பிரபு ஆகியோர் இனைந்து நடித்த வெற்றி விழா திரைப்படம் 175 நாட்கள் திரையில் ஓடி சாதனை பெற்றது. அதன் பிறகு பிரதாப் போத்தன் இயக்கிய நெப்போலியன் நடிப்பில் வெளிவந்த சீவலப்பேரி பாண்டி மிக பெரிய வெற்றி பெற்றது.

Advertisement

நெப்போலியனுக்கு பெயர் வாங்கி கொடுத்த படமே இதுதான் என்றும் கூறலாம். இரண்டு மாபெரும் வெற்றிப்படங்களை கொடுத்ததும் இவரால் தமிழ் சினிமாவில் டைரக்டராக நிலையாக நிற்க முடியவில்லை. அடுத்ததாக இந்த வரிசையில் இருப்பவர் சரவணா சுபையா.

தல அஜித்தின் சிறந்த படங்களுள் ஒன்று சிட்டிஸன். அந்த சிட்டிஸன் படத்தின் இயக்குனர் சரவணா சுபையா. ஹிட்டான படங்களை கொடுத்தும் இவர் அதன் பிறகு துணை நடிகராக நடிக்க ஆரம்பித்து , டைரக்டராக நிலையாக நிற்க முடியவில்லை.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in