The Indian Times

மதுரை விமான நிலையத்தில் சி ஆர் பி எப் வீரர்கள் என்னை தொந்தரவு படுத்தினர் – நடிகர் சித்தார்த் பரபரப்பு குற்றசாட்டு

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சித்தார்த்.இப்படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வரிசையாக படங்களில் நடிக்க தொடங்கினார்.இவர் தமிழில் மட்டும் இல்லை தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார்.மேலும் நடிகர் என்பதை தாண்டி பாடகராகவும் தமிழ் சினிமாவை வலம் வருகிறார் சித்தார்த்,தற்போது இவர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார்,விரைவில் மீண்டும் படம் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

நடிகர் சித்தார்த் எப்பொழுதும் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருப்பார்.மேலும் இவர் அடிக்கடி அரசியல் தலைவர்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்குவதும் உண்டு.இவரை பலர் பாராட்டினாலும்,சிலர் திட்டி தீர்த்து தான் வருகின்றனர்.அந்தளவுக்கு ட்வீட்டர் மூலம் மிக பிரபலம் ஆகியவர் சித்தார்த்.தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன்படி நடிகர் சித்தார்த் தனது பெற்றோர்களுடன் மதுரைக்கு விமானத்தின் மூலம் வந்துள்ளார்.

Advertisement

அங்கு தன்னையும்,தனது அப்பா அம்மாவையும் அங்குள்ள சி ஆர் பி எப் வீரர்கள் தொந்தரவு படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, 20 நிமிடங்கள் எங்களை துன்புறுத்தினர்.அவர்கள் இந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என கூறினேன்,இருப்பினும் மீண்டும் இந்தியில் தான் பேசினார்கள்.அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என்றார்கள் என பரபரப்பான குற்றசாட்டை வைத்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in