The Indian Times

குடும்பத்துடன் கிறிஸ்துமஸை கொண்டாடிய நடிகர் சூர்யா….

நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ச்சியாக சூர்யா நடித்து வந்தார்.இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நடிகர் என்ற அந்தஸ்து கிடைத்ததே தவிர முக்கிய நடிகர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை.அதற்காக போராடிக்கொண்டிருக்கும் பொழுதுதான் இயக்குனர் பாலாவின் நந்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது.தனது நடிப்பு திறமையை மொத்தமாக காண்பித்த நடிகர் சூர்யாவிற்கு இப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் ஆக அமைந்தது.இந்த படத்தின் மூலம் சூர்யா முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார்.

Advertisement

தற்போது பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் பாலா உடன் வணங்கான் படத்தில் இணைந்துள்ளார்.கதாநாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடித்துள்ளார்.அண்மையில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது அப்படத்தில் இருந்து விலகி விட்டார்.மேலும் சிறுத்தை சிவா நடிப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.இப்படம் உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக உள்ளது.பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது

Advertisement

நடிகர் சூர்யாவிற்கு தேவ் மற்றும் தியா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவர்களை நடிகர் சூர்யா அடிக்கடி வெளியே அழைத்து செல்லும் பொழுது எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.தற்போது இருவரும் கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.சூர்யாவின் இரண்டு பசங்களும் நன்றாக வளர்ந்துவிட்டதை படத்தில் காண முடிகிறது.சூர்யா ரசிகர்கள் இந்த புகைப்படத்தினை ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in