The Indian Times

தஞ்சை வந்த கரிகால சோழன்…பொன்னியின் செல்வன் 2 MINI TEASER உடன் வெளியாகும் தேதியை அறிவித்தது படக்குழு

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.காரணம் தமிழர்களின் வீரத்தினை உலகம் முழுவதும் தெரியப்படுத்த போவது என்பதால்.மேலும் பல மொழி சினிமாக்களும் ஆயிரம் கோடி வசூலை செய்து வரும் நிலையில் இப்படமும் ஆயிரம் கோடி வசூலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.படத்தில் கார்த்தி,விக்ரம்,ஜெயம்ரவி ,பிரபு,ஜெயராம்,ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.மேலும் ஒரே நாளில் உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வரை வசூல் செய்துள்ளது.இப்படத்தின் இரண்டாம் பாகமும் ஏற்கனவே எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.ஒரே செலவில் கையுடன் படக்குழு இரண்டு படங்களையும் எடுத்து முடித்து.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ஆனது அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதாக கூறப்பட்டது.தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகும் தேதி குறித்து இன்று மாலை அப்டேட் விட உள்ளதாக லைகா நிறுவனம் கூறியிருந்தது.

Advertisement

அதன்படி வெளியிட்டுள்ள சிறிய வீடியோவில்,விக்ரம்,ஜெயம் ரவி,கார்த்தி,ஐஸ்வர்யா ராய் ஆகியோர்களை காண்பித்து மீண்டும் சோழர்கள் வந்ததாக கூறி இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.மேலும் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : LYCA PRODUCTION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in