கொளுத்துங்கடா பட்டாச….AK61 பர்ஸ்ட் லுக் அப்டேட் குறித்து கசிந்த தகவல்

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் எல்லாம்.அந்த அளவிற்கு அஜித்குமார் மீது இவரது ரசிகர்கள் அளவுகடந்த அன்பு மற்றும் பாசத்தினையும் வைத்துள்ளனர்.இதற்கு முழுக்க காரணம் அஜித்,ஏனென்றால்,முதலில் உன் குடும்பத்தினை பார்த்துக்கொள் அடுத்து வந்து என் படத்தினை பார் என்று ரசிகர்களுக்கு அவர் அன்பாக கூறும் அறிவுரையை அஜித் பின்னால் இத்தகைய கூட்டத்தினை கூட்டியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  Register Marriage செய்துகொண்ட நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா

கொளுத்துங்கடா பட்டாச....AK61 பர்ஸ்ட் லுக் அப்டேட் குறித்து கசிந்த தகவல் 1

விளம்பரம்

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் குடும்பத்தினரும் இப்படத்தினை பெரிதளவு கொண்டாடினர்.வலிமை படத்தின் வெற்றிக்குப்பிறகு தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 61 வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது

கட்டாயம் படிக்கவும்  வெந்து தணிந்தது காடு பட கதாநாயகியின் கலக்கல் புகைப்படங்கள்

கொளுத்துங்கடா பட்டாச....AK61 பர்ஸ்ட் லுக் அப்டேட் குறித்து கசிந்த தகவல் 2

விளம்பரம்

வலிமை படத்தின் அப்டேட் விட பல நாட்கள் எடுத்துக்கொண்டதால் அஜித்தின் புதிய படத்திற்கும் அதுபோல எதாவது ஆகிவிடுமா என ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில் தல அஜித் நடித்து வரும் 61வது படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வருகிற ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.விரைவில் படக்குழுவினரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது அஜித் வெளிநாட்டில் பைக் ட்ராவல் செய்து வருவதால் நாடு திரும்பி மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னா புகைப்படங்கள்

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment