குடத்தில் அதே தாளத்தினை அப்படியே போட்டு கஞ்சா பூவு கண்ணால பாடலை பாடிய திருமூர்த்தி

சில வருடங்களுக்கு முன்னர் கண் பார்வை தெரியாத திருமூர்த்தி என்பவர் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகியது.இதனை கண்ட இசையமைப்பாளர் இமான் அவரை கண்டுபிடித்து அவருக்கு தனது இசையில் பாடல் பாட வாய்ப்பினை வழங்கினார்.அண்மையில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் குலசாமி என்ற பாடலை இவர் பாடியுள்ளார்.இப்பாடல் நல்ல வரவேற்பினை பெற்றது.இவர் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகிய சீறு படத்தில் செவ்வந்தியே என்ற பாடலை பாடி பாடகராக அறிமுகம் ஆகினார்.நன்றாக பாடியும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி தொடரில் என்ட்ரி கொடுத்த அனிதா சம்பத்... ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

குடத்தில் அதே தாளத்தினை அப்படியே போட்டு கஞ்சா பூவு கண்ணால பாடலை பாடிய திருமூர்த்தி 1

விளம்பரம்

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பத்தலை பத்தலை பாடலை குடத்தில் இசையமைத்து இவர் பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ மிகப்பெரிய அளவு இணையத்தில் வைரலாகியது.அதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டி அவருக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பயிற்சி பள்ளியில் முறையாக இசை கற்பதற்கு தேவையான செலவுகளை செய்துள்ளார்.இந்த வீடியோ பெருமளவு வைரலாகி பல மக்களிடமும் சென்றடைந்தார் திருமூர்த்தி.நிச்சயம் இவருக்கு இதற்கு பின்னர் நிறைய சினிமா பாடல் பாட வாய்ப்புகள் கிடைக்கும் என தோன்றுகின்றது

கட்டாயம் படிக்கவும்  தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நாயகி பவித்ராவின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

குடத்தில் அதே தாளத்தினை அப்படியே போட்டு கஞ்சா பூவு கண்ணால பாடலை பாடிய திருமூர்த்தி 2

விளம்பரம்

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விருமன்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இருந்து முதலில் வெளியாகிய கஞ்சாபூவு கண்ணால பாடல் நல்ல வரவேற்பினை பெற்றது.தற்போது திருமூர்த்தி பிளாஸ்டிக் குடத்தில் இந்த பாடலுக்கு இசையமைத்து இப்பாடல் பாடி இணையத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் திருமூர்த்தி என கருத்துக்களை தெரிவித்து வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் சுந்தரி சீரியல் நாயகி கேபியின் கலக்கல் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment