The Indian Times

டாக்ஸி ட்ரைவர் ஆக மாறி எதிரிகளை அடிச்சு தூக்கிய AISWARYA RAJESH … DRIVER JAMUNA TRAILER

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து நீதானா அவன் என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடிகையாக நடித்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தார்.இந்த படத்திற்கு பிறகு அவர் 8 படங்கள் தமிழில் நடித்துள்ளார்.பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய அட்டகத்தி படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.எந்த படத்திலும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து போராடி வந்தார் அப்பொழுதுதான் விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மி படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.இந்த ரம்மி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் ரசிகர்களை தன்னை திரும்பி பார்க்க செய்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.காக்க முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும்,தனுஷுக்கு ஜோடியாக வட சென்னை படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படவைத்தார்.தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்துள்ளார்.

Advertisement

மேலும் இவர் சினிமாவில் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியம் அதிகமாக இருந்தால் அந்த படத்திலும் நடித்து வருகிறார்.அந்த வகையில் தற்போது வத்திக்குச்சி பட இயக்குனர் கின்ஸ்லின் இயக்கத்தில் ட்ரைவர் ஜமுனா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவர் டாக்சி டிரைவராக நடித்து அசத்தி உள்ளார்.இப்படத்தினை எஸ்பி சௌத்ரி தயாரித்துள்ளார்,படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.பலரும் படம் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : Think music india

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in