AK62 குறித்து அப்டேட் வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்…போடு மஜா தான் அப்போ …

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.எந்த அளவிற்கு என்றால் இவரது படம் வெளியாகும் நாள்தான் அவர்களுக்கு தீபாவளி பொங்கல் என்ற அளவிற்கு.அஜித்குமாரின் ஏதேனும் புதிய புகைப்படம் வெளியானால் அன்று அந்த புகைப்படம் தான் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட்.அந்த அளவிற்கு அஜித் குமார் மீது ரசிகர்கள் பாசத்தினை வைத்துள்ளனர்.காரணம் அஜித் தனது ரசிகர்களுக்கு எப்பொழுதும் முதலில் கூறுவது,உன் வாழ்க்கையை நீ பார்,குடும்பத்தினை கவனி என ரசிகர்களின் மேல் அக்கறையுடன் கூறுவதால்,ரசிகர்களுக்கு அஜித்தை அதிகம் பிடித்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்த பாவனி ரெட்டி

AK62 குறித்து அப்டேட் வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்...போடு மஜா தான் அப்போ ... 1

விளம்பரம்

அண்மையில் அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்திருந்தார்.இப்படம் நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றிருந்தது.அதேபோல் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக எந்த பாதிப்பையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதன் வசூல் குறித்து அதிகாரபூர்வ தகவலை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.இந்நிலையில் அஜித்குமார் தற்போது தனது 61வது படத்தினை மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தினை போனி கபூர் தான் தயாரித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா

AK62 குறித்து அப்டேட் வெளியிட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்...போடு மஜா தான் அப்போ ... 2

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் தனது 62வது படத்தினை நடிக்க உள்ளார்.இப்படத்திற்கு இப்போவே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது என்று தான் கூறவேண்டும்.அண்மையில் விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி ஒன்றில்,அஜித்குமார் 61வது படம் குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது,அஜித்தின் 62வது படத்தினை மிக வித்தியாசமான கதையில் இயக்க இருக்கிறேன்.இந்த படத்தில் என்னுடைய 100 சதவீத உழைப்பையும்கொடுக்க இருக்கிறேன் எனவே இப்படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்க்காத ஒரு அஜித் குமாரை கண்டிப்பாக பார்க்கலாம். இப்படம் தரமான படமாகவும் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் படமாகவும் நிச்சயம் இருக்கும் என தெரிவித்துள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment