The Indian Times

Bullet-பாடலுக்கு Mass-ஆக நடனமாடிய பாக்கியலக்ஷ்மி Reshma

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளவர் ரேஷ்மா.இவர் முதன்முதலில் தெலுங்கில் ஒளிபரப்பாகிய தி லவ் என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிப்பில் வெளியாகிய வம்சம் நாடகத்தில் நடித்தார்.பல நாடகங்களிலும் இவர் நடித்து வந்தாலும் இவருக்கான வரவேற்பு எந்த நாடகத்திலும் கிடைக்கவில்லை.

Advertisement

இருப்பினும் தொடர்ந்து முயற்ச்சி செய்து வந்தார் ரேஷ்மா.சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகர் பாபி சசிம்ஹா நடிப்பில் வெளியாகிய மசாலா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து இயக்குனர் எழில் இயக்கத்தில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூரிக்கு மனைவியாக நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளனர்.இவரை தற்போது வரை புஷ்பா என்று அழைத்தால் தான் மக்களுக்கு தெரியும் என்ற அளவிற்கு பிரபலமாகினார்.

Advertisement

இவர் பிக் பாஸ் சீசன் 3 போட்டியிலும் கலந்துகொண்டு தனது விளையாட்டு திறமையை காண்பித்தார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த நாடகத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.தற்போது இணையத்தில் வைரலாகி வரும் புல்லட் பாடலுக்கு நடனமாடி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in